"சுவர்க்கம் உங்களை அழைக்கிறது"

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ!

🌴ஸ்ரீலங்கா தாஃவா நிலையம் கட்டார் (SLDC- QATAR)- ஏற்பாட்டில் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் நவம்பர் மாதம் 2ஆம் திகதி 2018, கட்டாரில் மாபெரும் இஸ்லாமிய எழுச்சி மாநாடு மற்றும் பல விசேட நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.

🔸 "சுவர்க்கம் உங்களை அழைக்கிறது"
எனும் கருப்பொருளில்...

இலங்கை, இந்தியா மற்றும் சர்வதேசம் நன்கு அறிந்த தாய் மொழியாம் தமிழ் மொழியில் பல்வேறு உரைகள் மற்றும் மார்க்க சொற்பொழிவுகளை நிகழ்த்தும் சிறந்த பேச்சாளர்களான....
அஷ்ஷேய்க், கலாநிதி M.L. முபாரக் (மதனி), அஷ்ஷேய்க் A.C.K. முஹம்மத் (ரஹ்மானி), மற்றும் அஷ்ஷேய்க் ஆதில் ஹசன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கும் இந்த நிகழ்வு கட்டார் (B) பின் ஸாயித் மண்டபத்தில் - பனார் இடம்பெற இருக்கின்றது.
இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் பயன்படுத்திக்கொள்ள அனைவரும் முன்வருவோம்!

〰மறுமை நம்பிக்கை கொண்ட முஸ்லிம்களுக்கு நரகம் பற்றி அதிகமாக எச்சரிக்கை செய்யப்படுவதைப் போன்று சுவர்க்கம் பற்றி அதிகம் நினைவு கூறப்படுவதில்லை. சுவர்க்கத்தின் இன்பங்கள் பற்றி பேசப்படும் அளவிற்கு அதில் நுழைவதற்கான தகுதிகள், மற்றும் இதர விஷயங்கள் பற்றி அதிகம் போதிக்கப்படுவதுமில்லை.

எனவே, சுவனம் பற்றி அல்குர்ஆன் மற்றும் நபிமொழிகள் நமக்குக் கூறும் நற்போதணைகள் மற்றும் வரலாற்றுச் சம்பவங்கள் பலவற்றை நாமும் அறிந்து நமது மறுமைக்கான பாதையை ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை நோக்கி நகர்த்திட முயற்சிப்போமாக !

ஜஸாகுமுல்லாஹு கைரா

➖ஏற்பாடு,
ஸ்ரீலங்கா தாஃவா சென்டர் -கட்டார் (SLDC-QATAR)

Leave a reply