அஸ்ஸலாமு அலைக்கும்!
SLDC-Qatar வருடாவருடம், கட்டார் வாழ் இலங்கை முஸ்லிம் சகோதரர்களின் அந்நியோன்ய உறவை மேம்படுத்தும் வகையில் இஸ்லாமிய சூழலுடனான ஒரு விளையாட்டு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வது வழமை. அதன் அடிப்படையில் இந்த வருடமும் இன்ஷா அல்லாஹ் (2017-Dec-18), ஒரு பொது விளையாட்டு நிகழ்ச்சியை மீஸய்த் QP மைதானத்தில் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சி நிரலில் சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள், இளைஞர்கள் பெரியோர்களுக்கான போட்டி நிகழ்ச்சிகள், பெண்களுக்கான நிகழ்ச்சிகள் மற்றும் பொது அறிவுப் போட்டி நிகழ்ச்சிகள் என்று பலதரப்பட்ட நிகழ்ச்சிகளும் அந்நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வெற்றிபெறுவோருக்குமான பரிசில்களும் வழங்கப்பட இருப்பதுடன் பகல் உணவு, சிற்றுண்டி ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.